Saturday, March 31, 2007
ஏதேதோ மாற்றம்.....
என்னை நீ மாற்றினாயே
எனக்குள்ளே இருந்து கொண்டு
என்னை நீ வாட்டினாயே
உயிரை நீ எடுத்துவிட்டாய்
என் ஜீவன் தொலைத்துவிட்டாய்
மௌனத்தின் மொழியாலே
உன் காதல் சொல்லிச் சென்றாய்
என் காதல் தீரவில்லை
என் விழியும் மூடவில்லை
நீ மட்டும் போதும் கண்ணே
என் உயிரும் போகும் வரையில்
என் மூச்சில் நீதான் அன்பே
என் உயிரும் நீதான் என்பேன்
ஒரு வார்த்தை சொன்னாய் அன்று
உயிர் முழுதும் பறித்தாய் இன்று
வாழ்வு இருக்கும் காலம் வரையில்
உன் மடியில் சரணம் ஆவேன்
உயிர் விட்டுப் போகும் நொடியில்
எனக்குள்ளே உந்தன் ஜீவன்....
--------- சிம்புவோட காதல் அழிவதில்லை படத்தோட பார்க்காத போது போது பாட்டோட first 4 line ட்யூன் கொஞ்சம் பிடிச்சு போய் அந்த impression la எழுதினது..
Saturday, March 24, 2007
கருவறை கதறல்.....
நீ கண்ட கனவுகளை
நனவாக்க
உன் ஆசைப்படி ஒரு
புது யுகம் படைக்க
பிறக்கவுள்ளேன் நான்
நிலவில் கால் வைக்கத்தானே
ஆசைப்பட்டாய் நீ
ஆனால் இதோ
நிலவில் ஒரு புது
மானிடம் படைக்க
பிறக்கவுள்ளேன் நான்
உன் வாக்குப்படி
நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
என் கருவறை பாடமாகிறது
உன் கனவினை
நிஜமாக்க
பிறக்கப் போகும்
என்னை இந்த
கருவறைக்குள் இருந்து
மட்டும் உயிரோடு
மீட்டுத் தர
எழுந்து வா பாரதி....
என் நிஜத்தை நிழலாக்கி
உன் ஆசைகளை சாம்பலாக்கி
என்னை
கருவுக்குள்ளே புதைக்கும்
இந்த மதியற்ற
மானிடம் கண்டு
எனை மீட்க
எழுந்து வா பாரதி ....
Wednesday, March 21, 2007
கவிதை கேளுங்கள்.............!!!!
ஒரு நாலு மாசம் பதிவு எதுவும் போடலை....
என்ன காரணம் ... ?
வேலை அதிகம் , சாப்பிடாம தூங்காம ஆபீஸ்லயே இருந்தேன்....., அப்படி இப்படின்னு பொய் எல்லாம் சொல்லாத நல்ல (ரொம்பவே நல்ல ) பொண்ணு நான்.
என்னோட சோம்பேறித்தனம் தான் ஒன் அன் ஒன்லி ரீசன்...
டைம் கிடைக்கும் போது எல்லாம் என் டைரியில் எழுதிய கிறுக்கல்களில் (?) ஒன்று...
ப்ரியமானவளே,
**விளையாடும் உன்
விழிகள் செய்த
வினையால்
விழுந்ததடி
என் இதயம்
**உதடுகள் கூட
உண்மையாக சிரிக்க
மறுக்கும் இவ்வுலகில்
உன் விழிகள் கூட
புன்னகைப்பதேன்
**வார்த்தையாய் நீ
பேசிய எதுவும்
வாக்கியமாய் என்
மனதில் நுழையாமல்
தடை செய்கிறது
உன் விழி பேசும்
மொழிகள்
**உறங்க நினைத்து
மூடிய என்
விழிக்குள், மூடாத
உன் விழிகள்
வஞ்சம் செய்வதேன்
**மலை போல் வளைந்த
உன் புருவங்களுக்கு
கீழ் , நதிபோல் உன்
இரு கண்கள்
**பேசாமல் பேச
வைக்கும்
பேசாத விழிகளே
விலகிப் போங்கள்
என் நினைவிலிருந்து...
கனவிலேனும்
உறங்க
ஆசை எனக்கு........