எல்லார் மாதிரி நானும் தமிழில் வந்துட்டேங்க...
தேடி தேடி டைப் அடிக்கறதுதான் கஷ்டமா இருக்கு...
சீக்கரமா பழகணும்.....
பழைய போடோஸ் எல்லாம் பார்த்துட்டு இருந்ததின் விழைவு தான் இந்த blog
ஹாஸ்டல் லைப் எல்லார்க்கும் கிடைக்கறது இல்லை ,
அந்த வகையில் நான் ரொம்ப கொடுத்து வைத்திருக்கேன்.......
4 வருஷம் எப்படி போகுதுனே தெரியாது...
கவலைனா கிலோ என்ன விலை ??
அப்படி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஈடு இணை இன்று வரை இல்லை.
சரி என் ஹாஸ்டல் லைப் பத்தி சொல்லறேன்......
முதல் நாள் பீஸ் எல்லாம் கட்டிட்டு , லக்கேஜ் குடுத்துட்டு அப்பா ,அம்மா டாட்டா சொல்லிட்டு போகும் போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்தது...ஆனா மனசுக்குள்ள இனி மேல் நாம ஒரு தனிக்காட்டு ராஜா(ராணி) ஒரு நினைப்பு !!!!!!!!அந்த சந்தோஷத்துக்கு எல்லாம் பிரேக் அடிச்ச மாதிரி சீனீயர்ஸ் போட்டாங்க ரூல்ஸ் ....
*** அவங்க எல்லோரும் 7 மணிக்கு தான் எழுந்திரிப்பாங்க so நாங்க எல்லாரும் அதுக்கு முன்னாடி எழுந்து குளிச்சடணும்... பாத்ரூம் காக எல்லாம் wait பண்ண மாட்டாங்க அதே மாதிரி மெஸ்க்கும் சீக்கரம் போய்ட்டு வந்துடணும் ..இப்படி இன்ன பிற Rules..
சரி சரி ஜுனீயர்ஸ் அ இருந்தா இது எல்லாம் சகஜம்தான்னு எடுத்துட்டோம்...
அவங்களுக்கு டைம் பாஸே எங்களை வம்புக்கு இழுக்கறதுதான்..
நானும் ரேகிங்ல மாட்டினேன் ஆனா ரொம்ப எல்லாம் இல்லை..
ஒரு பெரிய அக்கா கூப்பிட்டு Sit down -- Stand up inu ஒரு 1 hr Excercise பண்ண சொன்னாங்க..(பின்னாளில் நாங்க ரெண்டு பேரும் எங்க எதிரில் பார்த்தாலும்.. மாமியார் மருமகள் மாதிரி லுக் விடுவோம்...சும்மா டைம் பாஸ் தான்.....)
ஒரு அண்ணா (ஐயோ அவருக்கு 'அண்ணா' ன்னு சொன்னா பிடிக்காது..சீனியர் Girls எல்லாம் அக்கா ன்னு கூப்பிடாட்டி திட்டுவாங்க...சீனியர் Guys எல்லாம் 'அண்ணா' ன்னு சொன்னா திட்டுவாங்க...நமக்கு எப்பவுமே confusion தான்..மாத்தி மாத்தி கூப்பிட்டு வாங்கி கட்டிக்குவோம்) Engg degree வாங்க எவ்வள்வு papers clear
பண்ணணும் ன்னு கேட்டாரு...தெரியாம திரு திரு ன்னு முழிச்சது இன்னும் நினைவு இருக்கு..
First year காலேஜ்ல ரொம்ப எல்லாம் enjoy பண்ணல....யார பார்த்தாலும் ஒரே பயம்...சீக்கரமே Sem வந்துடிச்சு..
என் ரூம் மேட் வேற ஹாஸ்டல் காலி பண்ணறேன்..வீட்ட விட்டுட்டு இருக்க முடியாதுன்னு ஒரே அழுகை...( 3 rd year la.. ஹாஸ்டலே காலி ஆனாலும்...வீட்டுக்கு போய் தான் ஆகணூமா ன்னு கேட்பா...home sick poi hostel sick வந்துடிச்சு அவளுக்கு)
அப்பறம் வந்தது கலகல ஜுலுஜுலு ன்னு 2 nd yr
ஹே ஹே நாங்களும் இப்ப சீனியர்ஸ் ( ஆனா 1st yr's க்கு தனி ஹாஸ்டல் போட்டுடாங்க so அவங்க எங்ககிட்ட இருந்து தப்பிச்சுட்டாங்க )
இப்ப தான் நாங்களும் காலேஜ் ஸ்டுண்ட்ஸ்க்குரிய இலக்கணத்தோடு க்ளாஸ் கட் அடிச்சுட்டு லைப்ரேரியில் தூங்கற மாதிரியான வேலை எல்லாம் ஆரம்பிச்சோம்..
ஹாஸ்டல் லைப்ல பிடிக்காத ஒரு விஷயம் மெஸ் சாப்பாடு...அது என்னவோ நைட் என்ன மெனுன்னு முன்னாடியே தெரிஞ்சுட்டு சாப்பட போறது பிடிக்கலை...(லைப்னா ஒரு thrilling வேண்டாமா...monday na சப்பாத்தி..Tuesday na இட்லின்னு என்ன இது timetable வாழ்க்கை..) உப்புமா எல்லாம் வேற எங்க சாப்பிட்டு பழக முடியும் ஹாஸ்டல்லதான்.
நைட் 8:30 வரைக்கும் தான் டிவி பார்க்க முடியும் ...8:30 க்கு முன்னாடி எல்லாம் மெகா சீரியல்தான்....அதுக்காக பார்க்காம எல்லாம் இருக்க மாட்டோம்...கரெக்ட் டைம்க்கு டிவி ஹால்ல attendence போட்ருவோம்..
3rd yr la எங்க ரூம்ல புதுசா ஒரு நபர் ஆமாங்க நான் ஒரு computer வாங்கிட்டேன்!!! ஒரே பாட்டும் படமும் தான் ரூம்ல..
காக்க காக்க படம் ரீலிஸ் ஆன டைம் அந்த சீடி தேஞ்சு போற அளவுக்கு பார்த்தோம்..( உயிரின் உயிரே பாட்டுல சூர்யா slow motion la ஓடி வருவாரு ஆனா எங்க சீடில ரொம்பபபபபபப slowaaaa வருவாரு அவ்வளவு தேச்சுட்டோம் )
நைட் ஒரு நாள் படம் பார்க்கும்போது (30 பேரு 1 ரூம்ல) கதவை சாத்த மறந்துட்டோம்...லைட் எல்லாம் off பண்ணியாச்சு...... எல்லாரும் அமைதியா படம் பார்த்துட்டு இருக்கும் போது...என் friend திடீருன்னு சைடுல பார்த்துட்டு........யாரோ நம்ம வார்டன் மாதிரி இடுப்புல கை வச்சுட்டு படம் பார்க்கறாங்க பாருன்னா....நானும் யதார்தமா திரும்பி பார்த்தா ஐயோ அது நெஜமாவே எங்க வார்டன !!!!!!!!!!
அவங்க பின்னி பெடல் எடுத்தது தனி கதைங்க...........
எங்க சீனியர்ஸ் சில பேர்க்கு அவங்க final yrla கல்யாணம் ஆகிடிச்சு...மாப்பிள்ளை எல்லாம் foriegn than ...தாலியை கட்டிட்டு., ஒரு செல் போன் வாங்கி கொடுத்து ஹாஸ்டல கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க...
இவங்களும் எல்லா Corridor layum நின்னு நின்னு போன்லயே குடும்பம் நடத்தினாங்க ( என்னடா பொழப்பு இதுன்னு நாங்க எல்லாம் ஒரு லுக் ...எங்க நாமளும் சீக்கரமே மாட்டிடுவோம்ன்னு அடி வயத்துல ஒரு அனகோண்டா நெழிஞ்சது உண்மை)
Odd Sem சீஸன்ல வர்ற திருவிழா தான் "Techincal Symposium" ..
இதுக்காக 1 1/2 மாசமாவது க்ளாஸ் கட் அடிப்போம்..அந்த் event இந்த event inu எப்ப பாரு கூட்டம் கூட்டமா நின்னு கடலை போடறதுன்னு அராஜகம் பண்ணுவோம்..
"Symposium" ஸ்டார்ட் ஆனா திருவிழா ஜோதில கலந்திடுவோம்...இந்த 3 நாளும் தான் நம்ம காலேஜ் பசங்களை விட மற்ற எல்லா பசங்களும் அழகா ..ஸ்மார்ட்டா தெரியுவாங்க...(ஹும் எல்லாம் ஹார்மோன் problem..எங்க மேல எந்த தப்பும் இல்லை)
திடீருன்னு சொல்லாம கொள்ளாம final yr வந்துடும்...இவ்வளவு நாள் பொறுப்பு இல்லாம அரியர் மலையோட இருந்தவங்க எல்லாம் சீரியசா படிக்க ஆரம்பிச்சுடுவாங்க.....சில பேரு campus la place ஆகிடுவாங்க....கொஞ்ச பேர் முகத்துல எதிர்காலம் பத்தின பயம் தெரிய ஆரம்பிச்சுடும்..........ப்ராஜக்ட் submit பண்ணணும் , interview prepare பண்ணணும் ஒரே டென்சன்...
சோகம்னா என்னனு நெஜமாவே இந்த final yr la தான் எல்லாரும் உணர்ந்தோம்.... இனிமேல் யார் யார் எங்க போவோம் ...எப்போ meet பண்ணுவோம் .....meet பண்ணுவோம மாட்டோமான்னு மனசுக்குள்ள ஒரு கேள்வி ?
அப்பறம்....farewell , autograph அழுகைன்னு எங்க காலேஜ் லைப் ம் முடிஞ்து......
திரும்ப கிடைக்காத வாழ்க்கைங்க.........
எப்போ நெனைச்சாலும் மனசுக்குள்ள மழை தூறல்தான்..........
நின்று போன தூறல் மீண்டும் என்று துளிக்குமா ........????
12 comments:
fulla padichu mudichittu scroll panni paatha thaan therinjadi idu periya post-nu...
nalla flow, kalakkirkinga!!!
//சீனியர் Girls எல்லாம் அக்கா ன்னு கூப்பிடாட்டி திட்டுவாங்க...சீனியர் Guys எல்லாம் 'அண்ணா' ன்னு சொன்னா திட்டுவாங்க...நமக்கு
எப்பவுமே confusion தான்..//
LOL :)
senior pasangala paathu "anna"nu sonna evana irundaalum kova paduvaan !!! {neenga sonna ade harmone than sundari :)
//ஆனா எங்க சீடில ரொம்பபபபபபப slowaaaa வருவாரு அவ்வளவு தேச்சுட்டோம் )
//
idu super... ROFL :)
ipdi neraya nalla eludirkinga...
mothathula ellarukkum hostel like nyabagam varradu urudi !!!
-Arun
//fulla padichu mudichittu scroll panni paatha thaan therinjadi idu periya post-nu...//
Thanks arun..even i felt the post to be bit big only...will keep in mind next post onwards
என்னங்க இவ்வளவு பெரிய மேட்டரை ஒரே போஸ்ட்ல சொல்லிட்டீங்க...
பொறுமையா இதையே 4-5 போஸ்ட்டாக்கி போடுங்க... பின்னாடி மேட்டரும் கிடைக்காம போயிடும்...
அப்பறம் தமிழ்ல முதல்ல டைப் பண்ணும் போது கஷ்டமாத்தான் இருக்கும் அப்பறம் பழகிடும் :-)
நல்லா எழுதறீங்க... தொடர்ந்து எழுதவும்...
write more.. thanks for those nice comments on my blog! Looking forward to read more from yours!
-Deeksh
First time here. Nalla irukku tamil blog. :-)
hi thanks a lottttt 4 dropping in my blog .. yes thanx .. 4 tat comment on the poem .. but u know wat .. i read ur earlier post ..but this one is fully in tamil and i do not know that well ... ie the prob .. anyways l read and post comments abt that soon .. ll take a lil time [:D]
போட்டோவெல்லாம் பதிவுல நம்பிப் போடாதீங்க!
தமிழ் வலையுலகில் பொறுப்பற்ற பொறம்போக்குங்ககூட இருக்குறாங்க!
வெறுப்பேத்தணும்னு சொல்லலை. வீணா வருத்தப்படவேண்டாமேன்னுதான்!
கொஞ்சம் சின்னதா பதிவைப்போடுங்க! இவ்வளவு நீளமா ஹைவேஸ்மாதிரி பதிவு போட்ட 100 பதிவுகள் இலக்குக்கு சரக்கு வேணுமில்லையா? பெரிய வேர்ஹௌஸே இருக்குன்னாலும் சரி!
அம்மணி இதுல கமெண்ட் மாடரேஷனும் எனேபிள் செய்யலியா! சுத்தம்! மொதல்ல செட்டிங்ஸ்ல போய்ப் பண்ணுங்க!
@Deekshanya,@Deepa @meenu
thanks a lot for visiting n sharing ur thoughts..
@வெட்டிப்பயல்
கொஞ்சம் பெரிசாத்தான் எழுதிட்டேன்..
அடுத்த தடவை சரி பண்ணிடறேன்!!
@Hariharan # 26491540
கமெண்ட் மாடரேஷன் எனேபிள் செஞ்சாச்சுங்க...
thnx for that info..
A good title and very sensitive issues too.
So Beautiful.... your college days...
and your writing skill...
Keep it up the best - Selva
So beautiful.. your college days.. and your writing skill...
keep it up the best
- selva
Post a Comment