நான் எழுதற முதல் Tag...எழுத அழைத்தவர் நம்ம பாசமிகு அண்ணன் Gils
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
மனசு சந்தோசமா இருக்கும் போது பார்கற எல்லா விஷயமே அழகா இருக்கும். அது நிரந்தரமானதானு கேட்டா , கண்டிப்பா இல்லை நாம இருக்கிற சூழ்நிலைய பொறுத்து, நமக்கு வேற வேற விஷயங்கள் அழகா தெரியும்..பத்து வயசில அழகா தெரிஞ்சது, இருபது வயசில மாறிடும் :)
காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் இல்லாத மனுஷனே கிடையாது. ஒரு ஆண்-பெண் க்கு நடுவில வருவது மட்டும் காதல்னு சொல்லிட முடியாது, கண்டிப்பா எல்லார்க்கும் எதாவது ஒன்னு மேல காதல் இருக்கும்..புக்ஸ், சினிமா,கிரிக்கெட், பைக், கார்,பணம்,சாப்பாடு(?அட அப்படி கூட இருக்காங்க)...இப்படி எதாவது மேல அளவு கடந்த ப்ரியம் இருக்கும்...
"காதலே கனவுக்கு வழிகாட்டி....கனவுகளே நாளைய விடியலின் சுவாரசியம்"
So..காதல் அவசியம்தான்
கடவுள் உண்டா?
இருக்கலாம்.
"கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா கைவிட்டிடுவான்
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்" அப்படின்னு சொல்லறாங்க
சில சமயம் நல்லவங்களை ரொம்ம்ம்ம்ம்ப சோதிக்கும் போதுதான்..உண்மையிலே கடவுள் இருக்காறான்னு சந்தேகம் வருது.
பணம் அவசியமா?
கண்டிப்பா பணம் தேவைதான்..எவ்வளவு தேவைங்கறதுலதான் குழப்பம்..
நம்ம தேவைகளுக்கு தகுந்த அளவிற்கு பணம் சம்பாதிக்கணுமா?
இல்லை நம்ம சம்பாத்தியத்துக்குள்ள தேவைகளை அடக்கிகனுமான்னு புரியாம ரெண்டும் மாத்தி மாத்தி துரத்த ஓடிட்டு இருக்கோம் !!
இந்த டேக்கை நான் எழுத அழைப்பது R.Gopi ...என் ப்ளாக் படிக்கற மத்த ஒன்னு ரெண்டு ஜீவனையும்...Gils ஏற்கனவே எழுத சொல்லிட்டாரு :)